ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 8,981 பேருக்கு கொரோனா: சென்னையில் 4,531 பேர் பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 8,981 பேருக்கு கொரோனா: சென்னையில் 4,531 பேர் பாதிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Corona | தமிழ்நாட்டில் இன்று ஒரு நாளில் 8,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,36,292 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 8,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 27,76,413 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து 30,817 பேர் உள்ளனர். இன்று மட்டும் 984 பேர் கொரோனா பாதித்து வீடு திரும்பியுள்ளனர்.

  கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 4,531 பேருக்கும், செங்கல்பட்டில் 1,039 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 257 பேருக்கும், திருவள்ளூரில் 514 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: CoronaVirus