முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Corona virus | சென்னையை விட கோயம்புத்தூரில் அதிகரித்த கொரோனா பாதிப்பு

Corona virus | சென்னையை விட கோயம்புத்தூரில் அதிகரித்த கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Last Updated :

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபோதிலும், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவந்தது. இருப்பினும், தற்போது ஐந்து தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துவருகிறது.

இந்தநிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,62,518 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 33,764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 19,45,260-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 29,717 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 16,13,221 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது, கொரோனா பாதிப்பால் வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 3,10,224-ஆக இருந்துவருகிறது. கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 475 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 21,815 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 3,561 பேருக்கும், கோயம்புத்தூரில் 4,268 பேருக்கும், செங்கல்பட்டில் 1,302 பேருக்கும், ஈரோட்டில் 1,642 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: CoronaVirus