தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘தினசரி தொற்று உறுதியாகும் எண்ணிக்கை 1500 லிருந்து 1600 ஐ தாண்டக் கூடும். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே கணிக்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் பரிசோதனைகள் அதிகமானதால் தொற்று எண்ணிக்கை அதிகமானது. ஆனால் தற்போது தொற்று உறுதியாகும் விகிதம் மெல்ல அதிகரித்து வருகிறது என்பது கவலைக்குரிய செய்தியாகும். மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள இடங்கள் மற்றும் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டாத பிரிவினருக்கு தடுப்பூசி போடுவதை திட்டமிட்டு துரிதப்படுத்த வேண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தொற்று கண்டறியப்படும் இடங்களில் உடனடியாக Contact tracing அதாவது தொற்று உறுதியான நபர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்துதல் அவசியம். அப்போது தான் கூட்டம் கூட்டமாக தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இவை மட்டுமின்றி வரும் 12 ஆம் தேதி ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெகா தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொள்வதையும், இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் அதை எடுத்துக் கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus