கொரோனா மையத்தில் இருந்து மீண்டும் மீண்டும் எஸ்கேப் ஆகும் முதியவர்

கோப்புப்படம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர், திரும்ப திரும்ப முகாமில் இருந்து தப்பித்து வெளியே செல்வதால், மருத்துவ ஊழியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 • Share this:
  காரைக்குடி அரசு மருத்துவமனை கொரோனா மையத்தில் 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், கடந்த 13-ம் தேதி தப்பிச் சென்றார். பின்னர் ராஜீவ் காந்தி சிலை அருகே அவர் இருப்பதாக அறிந்த மருத்துவ ஊழியர்கள் அவரை மீட்டு கொண்டு வந்தனர்.

  மேலும் படிக்க...

  புதுச்சேரியில் கொரோனாவால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

  3 பேருக்கு கொரோனா : ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை ஒரு வாரத்திற்கு மூடல்

  அதேபோல இன்றும் அந்த முதியவர் தப்பிச்சென்று பிறகு கண்டுபிடிக்கப்பட்டார். இதுமட்டுமின்றி கொரோனோ சிகிச்சை பெறுபவர்கள், அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிவதால் புற நோயாளிகளுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

   
  Published by:Vaijayanthi S
  First published: