• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Breaking | சென்னை ஐஐடியில் 14 நாட்களில் 71 பேருக்கு கொரோனா தொற்று

Breaking | சென்னை ஐஐடியில் 14 நாட்களில் 71 பேருக்கு கொரோனா தொற்று

Youtube Video

சென்னை ஐஐடியில் கடந்த 14 நாட்களில் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மாணவர் தங்கும் விடுதி மற்றும் விடுதி உணவகம் மூலமாக கொரோனா பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
சென்னை ஐ ஐ டி வளாகத்தில் இந்த மாதம் 1ஆம் தேதி முதல் 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுதி மெஸ் மூலமாக பரவியுள்ளதாக சந்தேகிக்கப்ப்டுகிறது. இதுவரை 66 மாணவர்கள், நான்கு பணியாளர்கள் உட்பட 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி வளாகத்தில் நான்கு மாணவர்களுக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில் மெஸ் பணியாளர்கள் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பாதிப்பு அதிகரிக்கவே மெஸ் மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காண்டேக்ட் ட்ரேசிங் செய்ததில் 11ஆம் தேதி 11 பேருக்கும், 12அ ம் தேதி 12 பேருக்கும், 13ஆம் தேதி 32 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐ ஐ டி வளாகத்தில் ஆய்வகங்களும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களும் ஆசிரியர்களும் தனிமைப்படுத்திக் கொண்டு விடுதி அறைகளில் இருந்தோ அல்லது வீடுகளில் இருந்தோ பணி செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71 பேரும் கிங் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் உடல்நிலை சீராக உள்ளது. மொத்தம் 774 மாணவர்களில் 408 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் 366 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...தமிழகம் முழுவதும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மினி கிளினிக்குகள் இன்று திறப்பு.. சென்னையில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்..

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை செயலர் விடுத்த உத்தரவில், கொரோனா பாதிப்பு குறைந்ததால் அலட்சியப் போக்கு அனைவரிடமும் உள்ளது. இதை தவிர்க்க வேண்டும். கல்லூரிகள் திறந்துவிட்டதால் கல்லூரி, விடுதி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: