• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கடலூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : ஒரே நாளில் 148 பேர் பாதிப்பு

கடலூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : ஒரே நாளில் 148 பேர் பாதிப்பு

 கொரோனா

கொரோனா

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. மாவட்டத்தில் ஒரே நாளில் 148 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. மாவட்டத்தில் ஒரே நாளில் 148 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் மீண்டும் அதிகபட்ச தினசரி பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடலூர் மாவட்டத்திலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூரில் வியாழக்கிழமை வரை 26,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது . இந்நிலையில், நேற்று வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 148 பேருக்கு தொற்று உறுதியானது.

    இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,340 ஆக அதிகரித்தது. கடந்த சில வாரங்களில் 50 பேர் என நோய் தொற்று பதிவான நிலையில், தற்போது 100 தாண்டி பாதிப்பில் நேற்று அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது.

    43 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,465 ஆக உயர்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 438 பேரும், ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரேதம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மற்றும் சென்னை, திருச்சி, தஞ்சாவூர் என வெளியூரை சேர்ந்தவர்கள் என கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 145 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாட்டத்தில் இதுவரை 6.80 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    Must Read :  ரயில் சேவை குறைப்பா... பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையா? : ரயில்வே வாரியம் விளக்கம்

     

    இந்நிலையில், இன்று முதல் தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: