• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் யாரும் பட்டினியாக இல்லை. அனைவருக்குமான உணவுத்தேவை முறையாக பூர்த்தி செய்யப்படுகிறது.

  • Share this:
    தமிழக அரசு எடுத்த தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘தமிழ்நாட்டில் கொரோனா முதன்முறையாக மார்ச் மாதம் 7-ம் தேதி கண்டறியப்பட்டது. மார்ச் மாதம் 16-ம் தேதியிலிருந்து மால்கள், அண்டை மாநில மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிட்டப்பட்டது. மாநில எல்லைகள் பரிசோதனை செய்யப்பட்டன. மார்ச் 23-ம் தேதியே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய அரசு மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், அதற்கு முன்னதாகவே, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரையில் எனது தலைமையில் 12 முறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. ஜனவரி 23-ம் தேதி முதல் விமானநிலையத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தடுப்பு பணி வேகமாக நடைபெற 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பணிக்குழுக்களுக்கும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டன.

    தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து தலைமைச் செயலாளர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். அதனையடுத்து, அவர்கள் ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர். தமிழக அரசிடம் 3,371 வெண்டிலேட்டர்கள், முழு உடற்கவச உடை 2 லட்சம், 3 லட்சம் என்.95 முகக்கவசங்கள் கையிருப்பு உள்ளன.

    பரிசோதனைக்கான பி.சி.ஆர் கருவிகள் 68 ஆயிரம் உள்ளன. 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 5,590 பேருக்கு கொரோனா சோதனை செய்யும் வசதி நம்மிடம் உள்ளது. கொரோனாவைத் தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் தமிழகத்தில் போதுமான அளவில் உள்ளது. கொரோனாவைத் தடுப்பதில் தமிழக அரசு முன்கூட்டியே பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழகத்தில் யாரும் பட்டினியாக இல்லை. அனைவருக்குமான உணவுத்தேவை முறையாக பூர்த்தி செய்யப்படுகிறது.

    வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்கள் குறித்தும் தமிழக அரசு கவனம் செலுத்திவருகிறது. இந்தியாவிலேயே முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 97.9 சதவீத வீடுகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற 54 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு உணவு வழங்கப்பட்டுவருகிறது. இதுவரையில் 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தநிலையில் இன்று 62 பேர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: