கொரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மே மாதத்தில் இது உச்சமடைந்தது. தற்போது இந்த பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. எனினும், கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது. எனினும், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வு, ஊரடங்கு கட்டுப்பாடு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, பல்வேறு நாடுகளில் கொரோனா 3வது அலை பரவல் தீவிரம் எடுக்க தொடங்கியுள்ளது, உலக சுகாதார அமைப்பும் 3வது அலை தொடர்பாக எச்சரிக்கை விடுத்து வருகிறது.
Also read: 5 வயது குழந்தைகளுக்கு வாக்குரிமை இல்லாததால் நீமோ தடுப்பூசியை அதிமுக அரசு செலுத்தவில்லை - அமைச்சர் மா. சுப்ரமணியன் குற்றச்சாட்டு
இந்தநிலையில் மாவட்ட அளவில் கொரோனா தொற்று பரவலின் நிலை மற்றும் சில அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
காலை 10.30 மணியளவில் தலைமைச்செயலகத்தில் தொடங்கிய இந்த ஆய்வுக் கூட்டத்தில், கொரோனா தொற்று தடுப்பில் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தொற்று பரவல் அதிகரிக்கும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் செய்துள்ள சிறப்பு ஏற்பாடுகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளட்டது.
தொடர்ந்து, கொரோனா 3வது அலை பரவலை தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று விரிவாக கேட்டறிந்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுவரை எவ்வளவு பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இன்னும் எவ்வளவு பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற விவரங்களும் கேட்டறியப்பட்டன.
தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், டிஜிபி சைலேந்திரபாபு, ஆணையர் சங்கர் ஜிவால், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.