• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆவடியில் பாழடைந்து காட்சியளிக்கும் பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காக்கள்..

ஆவடியில் பாழடைந்து காட்சியளிக்கும் பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காக்கள்..

ஆவடி பூங்கா

ஆவடி பூங்கா

ஆவடியில் பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் பாழடைந்து காட்சியளிக்கின்றன. பூங்காக்களுக்கு பல ஆயிரம் ரூபாய் பராமரிப்பு செலவுக் கணக்கு காட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • Share this:
    சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. அம்ருத் திட்டத்தின் கீழ் 4 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பில், கடந்த 2019ம் ஆண்டு 3 பூங்காக்கள் திறக்கப்பட்டன. நிரஞ்சன் நகர், இந்திரா நகர், ஸ்ரீராம் நகர் ஆகிய பகுதிகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு, அவற்றை அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வைத்தார். ஆனால் அதன்பின் பூங்காக்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

    குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், சிசிடிவி கேமராக்களுடன் அமைக்கப்பட்ட பூங்காக்கள், தற்போது புதர்மண்டி காட்சியளிக்கின்றன. இதனால் அப்பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 90 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா, 6 மாதங்களுக்கு பின் மூடப்பட்டதாகவும், அதன்பின் திறக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. பூட்டிக் கிடக்கும் பூங்காவை பராமரிப்பதாக கூறி, 40,000 ரூபாய் வரை மோசடி நடந்ததாகவும் அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.

    மேலும் படிக்க... திருப்பு முனை: காமராஜர் விடுத்த சவால் தமிழக அரசியலில் திமுகவுக்கு திருப்புமுனை..

    திருமலை வாசன் நகரில் உள்ள பூங்கா, ஐந்து ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் காட்சியளிப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதன் மூலம் மக்களின் பல கோடி ரூபாய் வரிப்பணம் வீணாகியுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பூங்காக்களை திறக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: