முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தம் - திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தம் - திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்களுக்கு நகைகளை அடமானம் வைப்பதன் பேரில், கடன் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள பெரும்பான்மை மக்கள், தங்களிடம் கைவசம் உள்ள தங்க நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெற்று வந்தனர்.

இந்நிலையில், வாடிக்கையாளர்களிடம் நகைகளை அடமானமாக பெறுவதை நிறுத்துமாறு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்களுக்கு மூன்று தினங்களுக்கு முன்பு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நவடிக்கைக்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

First published:

Tags: Gold loan