கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் நிறுத்தமா? முதல்வர் விளக்கம்
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது நிறுத்தி வைக்கப்படவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
- News18
- Last Updated: July 15, 2020, 7:58 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, சுய உதவிக் குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த போது, கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக கூறினார். இதில் தமிழக அரசு மட்டும் 6 ஆயிரம் கோடி ஒதுக்கி சுகாதார பணிளை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு உரிய பணத்தை திருப்பி வழங்கும் வகையில், கடன் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். ஆனால், நகைக் கடன் வழங்குவதை நிறுத்தி வைக்கவில்லை எனவும் கூறினார். இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோனை வழங்கினார். பின்னர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்து பேசினார்.
படிக்க: கூகுள் + ஜியோ கூட்டுத்தயாரிப்பில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்படிக்க: கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் சென்னை - குணமடைவோர் விகிதம் உயர்வு
அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த போது, கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக கூறினார். இதில் தமிழக அரசு மட்டும் 6 ஆயிரம் கோடி ஒதுக்கி சுகாதார பணிளை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு உரிய பணத்தை திருப்பி வழங்கும் வகையில், கடன் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். ஆனால், நகைக் கடன் வழங்குவதை நிறுத்தி வைக்கவில்லை எனவும் கூறினார்.