Home /News /tamil-nadu /

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிப்பு!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிப்பு!

நகை கடன்

நகை கடன்

கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் அதாவது 40 கிராம் அளவுக்கு உட்பட்டு நகையை ஈடாக வைத்து கடன் வழங்கப்பட்டு மார்ச் 31, 2021 வரை நிலுவையில் உள்ள விவரங்கள் கோரப்பட்டுள்ளது.

    கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்திருக்கக்கூடியவர்களின் விவரங்களை தமிழக அரசு கோரியுள்ளது.

    கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக ஆட்சி அமைந்ததையடுத்து இது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருந்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் நகைக் கடன் தள்ளுபடி தொடர்பாக அறிவிப்பு வெளியாகுமா என்றும் எதிர்பார்ப்பு இருந்தது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு மட்டுமே பட்ஜெட்டில்  இடம் பெற்றது.

    இதையும் படிங்க: பெட்ரோல் விலை குறைப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல்


    இந்நிலையில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்திருக்கக்கூடியவர்களின் விவரங்களை தமிழக அரசு கோரியுள்ளது. இது தொடர்பாக  கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் அதாவது 40 கிராம் அளவுக்கு உட்பட்டு நகையை ஈடாக வைத்து கடன் வழங்கப்பட்டு மார்ச் 31, 2021 வரை நிலுவையில் உள்ள விவரங்கள் கோரப்பட்டுள்ளது.

    மேலும் படிங்க: குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் இவர்களுக்கு இல்லை- நிதியமைச்சர் திட்டவட்டம்!


    அதன் அடிப்படையில் அவர்களுடைய ஆதார் எண், குடும்ப அட்டை  விவரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விவரங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு வரும் 16ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Cooperative bank, Gold loan

    அடுத்த செய்தி