விரைவில் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு: வங்கிகள் மும்முரம்!

கடன்

நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று கூறப்படும் நிலையில், நகைக் கடன் பெற்றவர்களின் விவரங்களை வங்கிகள் மும்முரமாக சேகரித்து வருகின்றன.

  • Share this:
    கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை  தங்க நகை அடமானம் வைத்தவர்களின் கடன் தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக ஆட்சி அமைந்ததையடுத்து இது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருந்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்திருக்கக்கூடியவர்களின் விவரங்களை தமிழக அரசு கோரியது . கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் அதாவது 40 கிராம் அளவுக்கு உட்பட்டு நகையை ஈடாக வைத்து கடன் வழங்கப்பட்டு மார்ச் 31, 2021 வரை நிலுவையில் உள்ள விவரங்களை  இம்மாதம் 16ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என  கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: கொரோனாவால் பாதிப்பு: மணற்சிற்பம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி ஆசிரியர்!


    இதையடுத்து,  கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தங்கள் வங்கியில் நகை அடமானம் வைத்துள்ளவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ‘நகை கடன் தள்ளுபடியில் உங்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது. உங்கள் ஆதார் எண், குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் எண் ஆகியவற்றை சமர்ப்ப வேண்டும்’ என்று கூறியுள்ளனர். இந்த விவரங்கள் அனைத்தும் பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பப் பட்டுள்ளன. இதனால் நகை கடன் பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நகை கடன் தள்ளுபடி தொடர்பாக அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் என்றும் அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

    மேலும் படிக்க: அம்மா இருசக்கர வாகனம், இலவச லேப்டாப் திட்டங்களின் நிலை என்ன?

    Published by:Murugesh M
    First published: