Home /News /tamil-nadu /

நகைக்கடன் தள்ளுபடி: சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் சான்றிதழ் வழங்கும் பணி மும்முரம்..

நகைக்கடன் தள்ளுபடி: சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் சான்றிதழ் வழங்கும் பணி மும்முரம்..

நகைக் கடன் தள்ளுபடி

நகைக் கடன் தள்ளுபடி

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பகுதிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் அடகு வைத்த தங்க நகைகள் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
    கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைகளை வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்ப வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கி பயிர்க் கடன், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், 110 விதி கீழ் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான அதிகாரபூர்வ அரசாணையும் தமிழக அரசு வெளியிடப்பட்டது.

    நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக, அனைத்து நகைக்கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, தொலைப்பேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களைச் சேகரித்து, விவரங்கள் தொகுக்கப்பட்டு கணினி மூலம்  விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: பட்ஜெட் பெயரில் 'அல்வா' - தமிழக பட்ஜெட்டை கிண்டலடித்த ஜெயக்குமார்


    அதன்படி, நகைக்கடன் வாங்கிய 48 லட்சம் பேரில், 13 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. இதை தொடர்ந்து நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு முதற்கட்டமாக அதற்கான சான்றிதழ்களும் பின்னர் நகைகளும் வழ்ங்கப்பட்டு வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக முதலில் ஊரக பகுதிகளில் இந்த கடன் தள்ளுபடி பணிகள் நடைபெற்றன. தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து நகர்ப்புற பகுதிகளில் நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.

    மேலும் படிக்க: திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் அதிகரிப்பு..எடப்பாடி பழனிசாமி விமர்சனம்


    இது தொடர்பாக  கூட்டுறவு வங்கி ஊழியர் ஒருவர் நம்மிடம் கூறுகையில்,   சென்னை உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பகுதிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் அடகு வைத்த தங்க நகைகள் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Cooperative bank, Gold loan

    அடுத்த செய்தி