அரசின் 7 இலக்குகளை 10 ஆண்டில் எட்டிட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அவசியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பொறுப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சித் தலைவர்கள் கடமையாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

 • Share this:
  தமிழ் நாடு அரசு வகுத்துள்ள 7 இலக்குகளை பத்தாண்டு காலத்தில் எட்டிட மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் கொரோனா பரவலைத் தடுத்திட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நோய்த் தொற்று பரவலை குறைப்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

  மேலும் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பொறுப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சித் தலைவர்கள் கடமையாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு, மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி, குடிமக்களுக்கு குறையாத தண்ணீர், அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் மருத்துவம், உயர் தர ஊரகக் கட்டமைப்பு, அனைத்துமான தமிழ் நாடு என்பன உள்ளிட்ட 7 இலக்குகளை 10 ஆண்டுகளில் அரசு எட்டிட ஆட்சியர்கள் உதவ வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவிறுத்தினார்.

  மேலும், பொது விநியோகத் திட்டத்தை முறையாக செயல்படுத்திடவும் மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

  Also read: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயது நபர் உயிரிழப்பு!

  ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளம் எனக் கூறிய முதலமைச்சர் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பிட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
  Published by:Esakki Raja
  First published: