Home /News /tamil-nadu /

நெருங்கும் பண்டிகை காலம்.. சமையல் எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு - இல்லத்தரசிகள் கலக்கம்

நெருங்கும் பண்டிகை காலம்.. சமையல் எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு - இல்லத்தரசிகள் கலக்கம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உற்பத்தி மற்றும் விற்பனைஅடிப்படையில் சமையல் எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பண்டிகை காலங்கள் நெருங்கும் நிலையில், கடலை மற்றும் நல்லெண்ணெய் விலை அதிகரித்துள்ளது. விருதுநகர் எண்ணெய் சந்தையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 315 ரூபாய்க்கு விற்கபட்ட ஒரு லிட்டர் நல்லெண்ணெய் தற்போது 20 ரூபாய் அதிகரித்து 335க்கு விற்கபடுகிறது.  205 ரூபாயாக இருந்த கடலை எண்ணெய், 10 ரூபாய் அதிகரித்துள்ளது.  அதேநேரத்தில் பாமாயில் ஒரு லிட்டர் 20 ரூபாய் குறைந்து 125க்கும்,  சூரியகாந்தி எண்ணெய் லிட்டருக்கு 10 ரூபாய் குறைந்து 165க்கும் விற்கப்படுகிறது

    மத்திய அரசு இறக்குமதி வரியைகுறைத்தும் சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர். உலக சந்தையில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் ஆகியவற்றின் விலை குறைந்து வந்த நிலையில் மத்திய அரசு சமையல் எண்ணெய் விலை இங்கு குறைய வேண்டும் என்பதற்காக பல்வேறு

    நடவடிக்கைகளை மேற்கொண்டது. சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதுடன் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. மேலும் மத்திய அரசு சமையல் எண்ணெய் விலையை கிலோவுக்கு ரூ.15 குறைக்க வேண்டும் என சமையல் எண்ணெய் வணிக இருக்க வாய்ப்புள்ளதே தவிர அரசு அறிவுறுத்தியபடி விலையை குறைக்க சாத்தியமில்லை என கருத்து வட்டாரத்தினருக்கு அறிவுறுத்தியது. இதனையடுத்து சமையல் எண்ணெய் வணிக வட்டாரத்தினர் விலை நிர்ணயம் என்பது உற்பத்தி மற்றும் விற்பனை அடிப்படையில்தான்என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தற்போது சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு லிட்டர் ரூ 315 ஆக இருந்த நல்லெண்ணெய் ரூ 20 உயர்ந்து ரூ 335 ஆக விற்கப்படுகிறது. ரூ 205 ஆக இருந்த கடலை எண்ணெய் ரூ 10 உயர்ந்து ரூ 215 ஆக விற்கப்படுகிறது. ரூ 125க்கு விற்கப்பட்ட பாமாயில் ரூ 20 குறைந்து ரூ 105 ஆக விற்கப்படுகிறது. ரூ 175 ஆக விற்கப்பட்ட சன்பிளவர் ஆயில் ரூ 10 குறைந்து ரூ 165 ஆக விற்கப்படுகிறது.

    Also Read: ரயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்தால் ஜி.எஸ்.டி வரி..

    வணிக வட்டாரத்தினர் தெரிவித்தபடி உற்பத்தி மற்றும் விற்பனைஅடிப்படையில் சமையல் எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் எள், கடலை தட்டுப்பாட்டால் சமையல் எண்ணெய் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. சமையல் எண்ணெய் விலை அதிகரித்து உள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    இதே போன்று பருப்புகள் வரத்து குறைவால் பருப்புகள் விலையும் உயர்ந்துள்ளது. துவரம்பருப்பு கிலோ ரூ 10 உயர்ந்து ரூ 115க்கு விற்கப்படுகிறது, உளுந்தம் பருப்பு ரூ 10 உயர்ந்து ரூ 125க்கு விற்கப்படுகிறது. பாசிப்பருப்பு ரூ 100க்கும், கடலை பருப்பு ரூ 75 க்கு என கடந்த வார விலையே நீடிக்கிறது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Cooking Oil, Tamil News, Tamilnadu

    அடுத்த செய்தி