ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வெளியானது குக் வித் கோமாளி 3 புரமோ.. ரசிகர்கள் தேடிய அந்த கோமாளி மட்டும் மிஸ்ஸிங்!

வெளியானது குக் வித் கோமாளி 3 புரமோ.. ரசிகர்கள் தேடிய அந்த கோமாளி மட்டும் மிஸ்ஸிங்!

Cook with Comali 3 promo : குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ புரமோ வெளியானது. ‘சொல்லு சொல்லு’ என தொடங்கும் இந்த புரமோ ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது

Cook with Comali 3 promo : குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ புரமோ வெளியானது. ‘சொல்லு சொல்லு’ என தொடங்கும் இந்த புரமோ ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது

Cook with Comali 3 promo : குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ புரமோ வெளியானது. ‘சொல்லு சொல்லு’ என தொடங்கும் இந்த புரமோ ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது

 • 2 minute read
 • Last Updated :

  ஸ்டார் விஜய் டிவி-யில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் பெரும்பாலான சீரியல்கள் மாற்றுயம் ரியாலிட்டி ஷோக்கள் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ் முன்னணி சேனல்கள் பலவற்றிலும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இவை இரண்டு வெரைட்டிகளுமே மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளன என்பது தான் விஜய் டிவி-யின் ஸ்பெஷாலிட்டி.

  விஜய் டிவி-யில் எண்ணற்ற ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும் அவற்றில் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்று மெகாஹிட் ரியாலிட்டி ஷோக்களாக உள்ளவை 2. ஒன்று நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் மற்றும் சமையல் ஷோவை வித்தியாசமான பரிமாணத்தில் ஒளிபரப்பி ரசிகர்களின் மனதில் நிற்கும் குக் வித் கோமாளி. தற்போது மிகப்பெரிய பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே எந்த டிவி சேனல்களும் செய்து பார்க்காத முயற்சியாக சமையல் ஷோவை காமெடி கலந்து கொடுத்து ரசிகர்களை குதூகலப்படுத்திய ஒரு ஷோ தான் Cook with Comali .

  இதையும் படிங்க.. தலைநிமிர்ந்த தமிழ் சினிமா.. இதுவரை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட்!

  இந்த குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் சமையல் செய்ய, விஜய் டிவி-யின் காமெடி நடிகர்களும் அவர்களுடன் ஷோவில் பங்கு பெறுவார்கள். ஆனால் அவர்களுக்கு சமையலில் உதவி செய்ய அல்ல, பல கோமாளி தனங்கள் செய்து வியூவர்ஸ்களை கலகலப்பாக்கி சிரிக்க வைக்கவே.. இந்த ஷோவின் முதல் சீசன் 2019 நவம்பர் 16 முதல் 2020 பிப்ரவரி 23 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த சீசனை பிரபல ஆங்கர் ரக்ஷன் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகிய இருவரும் தொகுத்து வழங்க பிரபல சமையல் கலை நிபுணர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர்கள் ஜட்ஜஸ்களாக இருந்தனர். இதில் இறுதியாக வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார்.

  ' isDesktop="true" id="650843" youtubeid="1mP3mCEEVMg" category="tamil-nadu">

  அடுத ஆண்டு தொடங்கிய 2 ஆவது சீசனில்  கனி வெறியாளரானார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்து தங்கள் அபிமான ஷோவான குக் வித் கோமாளிக்காக சின்னத்திரை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் இந்த ஷோவின் சீசன் 3 ஷூட்டிங் துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இந்த சீசனில் யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. குக் வித் கோமாளி 3 ஷூட்டிங் செட்டில் இருந்து ஒரு போட்டோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த போட்டோவில் தங்கதுரை மற்றும் சுனிதா ஆகிய இருவரும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கின்றனர். இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி ரசிகர்கள் இந்த போட்டோவை சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்து வந்தனர்.

  இதையும் படிங்க.. தாமரையின் நிஜ முகத்தை பார்த்து ஷாக்.. உடைந்து அழும் பிரியங்கா!

  இந்நிலையில் நேற்று (29.12.21) மாலை குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ புரமோ வெளியானது. ‘சொல்லு சொல்லு’ என தொடங்கும் இந்த புரமோ ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதே நேரம் இந்த புரமோவில் முக்கியமான கோமாளியான புகழ் மிஸ்ஸிங். இதை கவனித்த ரசிகர்கள், புகழ் ஏமாற்றி விட்டதாக, அவரை இந்த சீசனில் பார்க்க முடியாது, வெள்ளித்திரைக்கு புகழ் சென்று விட்டதால் அவரை சின்னத்திரையில் பார்க்க முடியாது என ஏகப்பட்ட கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

  ஒருபக்கம் பல நாள் எதிர்பார்ப்பான குக் வித் கோமாளி புரமோ வெளியானாலும் மறுபக்கம் புகழ் இல்லாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சி எப்போது வெளியாகும் என குறிப்பிடப்படவில்லை. புகழ் இல்லையென்றால் என்ன சிவாங்கி, வெட்டுக்கிளி பாலா இருக்கார்கள் என ரசிகர்கள் அவர்களுக்கு சமாதானம் செய்து கொண்டு நிகழ்ச்சியை பார்க்க தயாராகி விட்டனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: