• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குழந்தை விற்பனை செய்யும் செவிலியர்? பேரம் பேசும் ஆடியோவால் பரபரப்பு

குழந்தை விற்பனை செய்யும் செவிலியர்? பேரம் பேசும் ஆடியோவால் பரபரப்பு

கோப்புபடம்

கோப்புபடம்

"சார், பெண் குழந்தைனா 2.70 லட்சம் சார்..ஆண் குழந்தைனா 3.70 லட்சத்துல இருந்து 4 லட்சம் வரை வரும் சார்"

  • News18
  • Last Updated :
  • Share this:
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த முன்னாள் செவிலியர் ஒருவர், குழந்தைகளை விற்பனை செய்வது தொடர்பாக போனில் ஒருவருடன் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் அமுதவள்ளி. அவர் செவிலியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். அவரிடம் குழந்தைகளின் விலை தொடர்பாக தருமபுரியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோ பதிவில், அமுதவள்ளியைத் தொடர்பு கொள்கிறார்.

    சதீஷ்: அமுதவள்ளிதானே பேசுறது... குழந்தை வாங்குறது சம்மந்தமா நான் கொஞ்ச நாள் முன்னாடி பேசியிருந்தேனே..

    அமுதவள்ளி: ஆமா, சொல்லுங்க சார்... நீங்க, அப்போ சரியா பதில் சொல்லல.. அதனால, அது(குழந்தை) போய்ட்டு.. நீங்க வேனா சொல்லுங்க.. புதுசா ரெடி பண்ணுறேன்.

    சதீஷ்: குழந்தை விலை எவ்வளவுங்க...

    அமுதவள்ளி: சார், பெண் குழந்தைனா 2.70 லட்சம் சார்..ஆண் குழந்தைனா 3.70 லட்சத்துல இருந்து 4 லட்சம் வரை வரும் சார்..

    என்று இருக்கும் உரையாடல் குழந்தையை எங்கே வந்து பெற்றுகொள்ளலாம், எப்போது பெற்றுக் கொள்ளலாம் என்று நீள்கிறது.

    இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷை தொடர்பு கொண்டபோது, ‘இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: