ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை’ - பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவால் சர்ச்சை

‘அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை’ - பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவால் சர்ச்சை

பொன்னையன்

பொன்னையன்

Ponnaiyan : எடப்பாடி பழனிசாமி குறித்து தான் பேசியதுபோன்று வெளியான ஆடியோ, தான் பேசியது இல்லை என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை என்றும், ஒற்றைத் தலைமைக்கு வர கே.பி.முனுசாமி முயற்சி மேற்கொண்டதாகவும் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசிய ஆடியோ வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆனால், தான் பேசவில்லை என்று பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பனுடன் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், முன்னாள் அமைச்சர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதாக திமுகவை திட்டுவதில்லை என்று பொன்னையன் கூறுவதுபோல உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு 9 எம்.எல்.ஏ. க்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாகவும், தனது பதவியைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதாகவும் கூறியிருப்பது போன்று உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி குறித்து தான் பேசியதுபோன்று வெளியான ஆடியோ, தான் பேசியது இல்லை என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.

Must Read : யூ-டியூபர் சாட்டை துரைமுருகனுக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

எடப்பாடி பழனிசாமி குறித்து தான் பேசியதுபோன்று வெளியான ஆடியோ, தான் பேசியது இல்லை என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து நமது செய்தியாளர் செல்வா-வுக்கு சிறப்பு பேட்டியளித்த அவர், அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது குரல் போன்றே மிமிக்ரி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, EPS, OPS, Ponnaiyan