Home /News /tamil-nadu /

கிறிஸ்தவ மிஷினரி இல்லையென்றால் தமிழ்நாடு பீகார் ஆகியிருக்கும்.. சர்ச்சையாகும் சபாநாயகர் அப்பாவுவின் பழைய வீடியோ

கிறிஸ்தவ மிஷினரி இல்லையென்றால் தமிழ்நாடு பீகார் ஆகியிருக்கும்.. சர்ச்சையாகும் சபாநாயகர் அப்பாவுவின் பழைய வீடியோ

அப்பாவு

அப்பாவு

கிறிஸ்தவ மிஷ்னரி குறித்த தமிழக சபாநாயகர் அப்பாவுவின் பேச்சுக்கு பாஜக கண்டனம்

    தமிழகத்தின் வளர்ச்சிக்கு கிறிஸ்தவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர் என்றும் அவர்கள் இல்லையென்றால் தமிழ்நாடு பீகார் ஆகியிருக்கும் என்றும் சபாநாயகர் அப்பாவு பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

    தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதய ராஜ் ஆகியோர் கடந்த மாதம் 28ம் தேதி திருச்சியில் உள்ள செயிண்ட் பால் சர்ச்சில் நிடைபெற்ற நிகழ்வு ஒன்றில்  கலந்துகொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது தற்போது சர்ச்சையாகி வருகிறது. இது தொடர்பாக ஏ.என்.ஐ. ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், அப்பாவு  நிகழ்ச்சியில் பேசும்போது,  கிறுஸ்தவ பாதிரியார்கள் சிஸ்டர்களும் இல்லையென்றால் தமிழ்நாடு பீகார் போல் ஆகியிருக்கும். நான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு காரணமே கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் சிஸ்டர்கள்தான்.  இந்த அரசை உருவாக்கியது நீங்கள்தான்.

    உங்களின் பிரார்த்தனைகளையும் விரதமும் இந்த அரசாங்கத்தை உருவாக்கியது.  திராவிட மாடல் அரசாங்கம் மற்றும் சமூக நீதிக்கு கத்தோலிக்க பாதரியார்கள் மற்றும் கத்தோலிக்க கிறுஸ்தவர்கள் தான் முக்கிய காரணம். நீங்கள் (கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்) யாரையும் சார்ந்திருக்க தேவையில்லை. உங்கள் பிரச்சனைகளை பட்டியலிட்டு நேரடியாக முதலமைச்சரிடம் கொடுங்கள். அவர் எதையும் மறுக்க மாட்டார்.

    ஏனெனில் இந்த அரசாங்கத்திற்கு நீங்கள் தான் காரணம் என்பது முதலமைச்சருக்கு தெரியும். இது உங்கள் அரசாங்கம் மற்றும் உங்கள் முதலமைச்சர். இதில் நான் உங்களுடன் இருக்கிறேன். தமிழகத்தில் இருந்து கிறிஸ்தவர்களை அகற்றினால் வளர்ச்சி இருக்காது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் முக்கிய காரணம். இன்றைய தமிழகம் உங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது’ என்று பேசியதாக குறிப்பிட்டுள்ளது.தற்போது இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக ஏ.என்.ஐ. ஊடகம் தெரிவித்துள்ளது.



    இது தொடர்பாக பாஜக துணை தலைவரும் செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி ’இதுதான் திமுகவின் மதச்சார்பின்மையா? தங்களை மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொள்ளும் உரிமையை அவர்கள் இழந்துவிட்டனர். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்பதை இப்போது இது நிரூபித்துள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: அரசுக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான நிலத்தை அபேஸ் செய்த அதிகாரிகள்..

    இந்த சர்ச்சை தொடர்பாக ஏ.என்.ஐ. ஊடகத்துக்கு விளக்கம் அளித்துள்ள சபாநாயகர் அப்பாவு, பாஜக எனது பேச்சை விளம்பரப்படுத்தினால் அது நல்லது. நான் அப்படி சொல்லவில்லை என்று சொல்லமாட்டேன். ஆம், நான் அப்படித்தான் சொன்னேன். ஆனால் சமூக வலைதளங்களில் ட்ரிம் செய்யப்பட்ட பதிப்புகள் மட்டுமே பரப்பப்படுகின்றன. நான் பேசியது வரலாற்று உண்மை. இதில் அரசியல் இல்லை’ என கூறியுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Christianity, Tamilnadu

    அடுத்த செய்தி