ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரையில் வட மாநிலத்தவர்களின் கடைகளைப் பூட்டி தமிழகத்தை விட்டு வெளியேறுமாறு போஸ்டர்...!

மதுரையில் வட மாநிலத்தவர்களின் கடைகளைப் பூட்டி தமிழகத்தை விட்டு வெளியேறுமாறு போஸ்டர்...!

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மதுரையில் பெரும்பாலான தொழில் நிறுவனங்களை மார்வாடிகள் எனப்படும் வடமாநிலத்தவர் கவனித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இதனால் உள்ளூரில் உள்ள தமிழர்களுக்கான வேலை வாய்ப்பு பறிக்கப்படுவதாகவும், தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் கரம் ஓங்குவதாக கூறி தமிழ் தேசியக் கட்சியினர், மார்வாடி நிறுவனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக ஹோலி பண்டிகையான இன்று வட மாநிலத்தவரை குறிவைக்கும் விதமாக மார்வாடிகளின் முக்கிய நிறுவனமான மணீஷ் டைல்ஸ் நிறுவனத்தின் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள இரு கடைகளை பூட்டிய தமிழ் தேசிய கட்சியினர், மார்வாடி களை வெளியேற்ற கூறும் போஸ்டர்களையும் அதன் மேல் ஒட்டினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று வேறு ஏதேனும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்த இரு கடைகளுக்கு பூட்டு போட்டு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் தேசியக் கட்சி என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதேபோல, சென்னையிலும் வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் வேப்பேரி பகுதியில் இதே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Gunavathy
First published:

Tags: Madurai