Home /News /tamil-nadu /

காட்டிக்கொடுத்த போன் சிக்னல்.. மருத்துவமனையில் பெண் கொரோனா நோயாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

காட்டிக்கொடுத்த போன் சிக்னல்.. மருத்துவமனையில் பெண் கொரோனா நோயாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

சுமிதா

சுமிதா

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பெண் கொரோனா நோயாளி சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் மௌலி. ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமிதாவிற்கு (41) கடந்த மாதம் 22 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மூச்சுத் திணறல் இருந்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை 3வது மாடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மனைவிக்கு உணவு கொடுத்துவிட்டு வீட்டிற்குச் சென்றவர் மீண்டும் கடந்த மாதம் 23 ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது சிகிச்சை பெற்று வந்த அறையில் இருந்து மனைவி சுமிதா மாயமானதால் அதிர்ச்சியடைந்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவமனை முழுவதும் ஊழியர்கள் எங்கு தேடியும்  கிடைக்காததால் மௌலி கடந்த மாதம் 31 ஆம் தேதி பூக்கடை காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்துவிட்டு சுமிதாவின் புகைப்படத்தை கொண்டு வருவதற்காக வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர் அவருக்கு உடலநலக்குறைவு ஏற்பட்டதாலும், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காரணத்தாலும் மௌலியால் மீண்டும் வர முடியாத சூழ்நிலை உருவானதாகக் கூறப்படுகிறது.

Also Read: அலட்சியத்தால் துண்டான பச்சிளம் குழந்தையின் விரல்.. ஒட்டவைக்கும் முயற்சியும் தோல்வி - செவிலியர் மீது வழக்குப்பதிவு

இந்த நிலையில் மருத்துவமனையின் 8வது மாடியில் இருந்து துர்நாற்றம் வந்ததால் அங்குச் சென்ற பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டறிந்து அதை பிணவறைக்கு கொண்டு சென்று வைத்துவிட்டு, மனைவி காணாமல் போனதாக புகாரளித்த மௌலிக்கு தகவல் தெரிவிக்க, அவரும் இறந்தவர் தனது மனைவி தான் என அடையாளம் காட்டியுள்ளார்.

இந்த நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில்  சுமிதாவின் பணம் ரூ.9,500 மற்றும் மொபைல் போன் காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகம் வலுத்ததால் பூக்கடை ஸ்பெஷல் டீம் போலீசார் விசாரணையில் இறங்கினர்.
கடந்த சில தினங்களாக சுமிதாவின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென செல் ஆன் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் கிடைக்கப் பெற்றவுடன் செல்போன் சிக்னல் லொகேஷன் வைத்து ஆராய்ந்த போது அது திருவொற்றியூர் பகுதியில் உள்ள ரதிதேவி என்பவரது வீட்டில் இருப்பது தெரிய வந்தது.

Also Read: ‘துரோகம் பண்ணிட்டாங்க அம்மா.. நீங்க வரனும்’ - சசிகலா தரப்பில் மீண்டும் ஒரு ஆடியோ ரிலீஸ்

இதனையடுத்து ரதி தேவியை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரதி தேவி என்பவர் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார் என தெரிய வந்தது.  கடந்த 23ஆம் தேதி காலையில் சுமிதாவிற்கு மயக்க நிலை ஏற்பட்டதால் அவர் வைத்திருந்த மொபைல் போன் மற்றும் பணத்தை ரதிதேவி திருடியுள்ளார். பின்பு மயக்கம் தெளிந்து சுமிதா எழுந்தபோது மொபைல் போன் மற்றும் பணம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரதிதேவி மட்டுமே பகல் நேரத்தில் அந்த அறைக்குள் சென்று வருவதால் அவர் மீது சுமிதாவிற்கு சந்தேகம் ஏற்பட்டு ரதிதேவியிடம் திருடிய பொருட்களை கொடுத்துவிடு என கூறியுள்ளார்.
திருடியதை ஒப்புக் கொண்ட ரதிதேவி இதைப் பற்றி வெளியே கூற வேண்டாம் எனவும் கூறினால் தனது வேலை போய்விடும் எனவும் சுமிதாவிடம் கெஞ்சியுள்ளார். மேலும் தங்களிடம் எடுத்த பொருட்களை எட்டாவது மாடியில் வைத்திருப்பதாக கூறி சுமிதாவை, ஊனமுற்றோர்களை அழைத்து செல்லும் லிஃப்ட்டில் ரதிதேவி 8 வது மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு மின் பகிர்மான அறை அருகே, சுவாசத்திற்காக மூக்கில் வைக்கப்படும் ஆக்சிசன் ட்யூபினால் சுனிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது தலைக்கு கால் செருப்புகளை தலையணையாக வைத்துவிட்டு வந்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்துவிட்டு வழக்கம் போல ரதி தேவி வார்டுக்குள் வந்து தனது பணிகளைச் செய்ததுடன் மட்டுமல்லாமல் மற்றவர்களுடன் சேர்ந்து இவரும் சுமிதாவை தீவிரமாக தேடுவது போல நடித்து வந்துள்ளார். மேலும், கொரோனா நோயாளி இறந்தால் பிரேத பரிசோதனை செய்யமாட்டார்கள் எனவும் அதனால் தப்பித்துக்கொள்ளலாம் என திட்டம் போட்டு கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் சுமிதாவிடமிருந்து திருடிய செல்போனை பயன்படுத்துவதற்காக அதில் வேறு ஒரு சிம்-ஐ பொருத்த முற்படும் போது மொபைலை ஆன் செய்துள்ளார். இந்த சிக்னல் மூலம் ஸ்பெஷல் டீம் போலீசார் இவரை கண்டறிந்து கைது செய்துள்ளனர். குறிப்பாக கடந்த 10ஆம் தேதி சென்னை காவல்துறை பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், சுமிதா உடலுக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் நோயின் தாக்கத்தால் மட்டுமே இறந்தார் என மருத்துவமனை ரிப்போர்ட் தந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் ரதிதேவி தான் அவரை கொலை செய்தார் என்றும் பூக்கடை ஸ்பெஷல் டீம் போலீசார் கண்டறிந்துள்ளனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:

Tags: Arrest, Chennai Police, Corona positive, Crime | குற்றச் செய்திகள், Death, Murder

அடுத்த செய்தி