தீபாவளி கொண்டாட்டம்: தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த படுகொலைகள்

தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது தமிழகத்தில் நடந்த படுகொலை சம்பவங்களால் மக்கள் மத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk | news18
Updated: November 8, 2018, 4:09 PM IST
தீபாவளி கொண்டாட்டம்: தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த படுகொலைகள்
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: November 8, 2018, 4:09 PM IST
தமிழகத்தில், தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் 2 இளைஞர்கள் உட்பட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெரும்பாக்கம் எழில்நகரைச் சேர்ந்த சந்தீப், தனது நண்பர்களுடன் தீபாவளியன்று பட்டாசு வெடித்துக்  கொண்டிருந்தார். அப்போது அருகில் பட்டாசு வெடித்த இன்னொரு கும்பலுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ராகுல் என்பவரை இக்கும்பல் தாக்கியதாகவும், பதிலுக்கு அவரது நண்பர்கள் சந்தீப்பை ஓட ஓட விரட்டிக்கொலை செய்துள்ளனர்.

சந்தீப் படுகொலை சம்பவத்தைக் கேள்விப்பட்ட அவரது நண்பர்கள், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 கார்கள், 3 ஆட்டோக்கள், 3 மினி வேன்கள் ஆகிய வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

தகவலறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்தீப் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சந்தீப்


சிறிய தகராறில் நண்பர்களே தங்கள் நண்பன் முருகனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் காரைக்குடியில் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒ.சிறுவயல் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன் மற்றும் ஜெயராமன், இருவரும் நண்பர்களாக இருந்தனர். இருவர் மீதும் பல வழக்குகள் உள்ளன. கடந்த வாரம் இருவருக்கும் இடையே சிறு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளியை ஒட்டி, தனது வீட்டருகே உள்ள கடையில் நின்று கொண்டிருந்தார் முருகன். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஜெயராமன், விஜய் மற்றும் 17 வயது இளைஞர் உட்பட  3 பேர் வந்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட முருகன்


அப்போது முருகனிடம், 3 பேரும் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றி, ஜெயராமன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், முருகனை குத்தியுள்ளார், பின் 3-ம் வாகனத்தில் ஏறி தப்பியோடினர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஜெயராமன், மற்றும் 17 வயது சிறுவனைக் கைது செய்த குன்றக்குடி போலீசார், 22 வயதான விஜய்யை தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் மதுக்கடை வாசலில் பொதுமக்கள் முன்பு 7 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக அடித்து உதைக்கப்பட்ட 45 வயது ஆனந்தன் அங்கேயே உயிரிழந்துள்ளார்.

பொள்ளாட்சியில் நடந்த கொலையில் கைதான 7 பேர்


பொள்ளாச்சி ATSC தியேட்டர் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு 5-ம் தேதி பிற்பகலில், வடுகபாளையத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் மது அருந்தி விட்டு வெளியே வந்தார். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றிச் சூழ்ந்து சரமாரியாகத் தாக்கியது. இந்த சம்பவத்தில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்த சிவமூர்த்தி, சதீஷ்குமார், வின்சென்ட், குட்டப்பன், கண்ணன், காளிதாஸ், கார்த்திகேயன் ஆகிய 7 பேர் சேர்ந்து ஆனந்தனைத் தாக்கியது பதிவாகியிருந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார், விசாரித்தபோது, சிவமூர்த்தி குடித்துக் கொண்டிருந்தபோது ஆனந்தன் பணம் கேட்டுத் தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர் எனத் தெரியவந்தது. கைதான ஏழு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Also see...

First published: November 8, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்