ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

NLC Boiler blast | என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில் தொடரும் விபத்துகள்.. காரணம் இதுதான்..! சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

NLC Boiler blast | என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில் தொடரும் விபத்துகள்.. காரணம் இதுதான்..! சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

விபத்து காட்சிகள்

விபத்து காட்சிகள்

NLC Boiler blas | என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில் தொடரும் விபத்துகள். ஆயுட்காலம் முடிந்தும் இயக்கப்படுவதுதான் காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 3 பெரிய விபத்துகள் நிகழ்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 2 விபத்துகள் நடந்துள்ளது.

  நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இரண்டாம் அனல்மின் நிலையத்தில் 210 மெகாவட் உற்பத்தித் திறன் கொண்ட 7 அலகுகள் உள்ளன. இவை அனைத்தும் 1988 முதல் 1993 ஆம் ஆண்டு காலத்தில் செயல்பாட்டிற்கு வந்தவை. பொதுவாக சர்வதேச அளவில் ஒரு அனல்மின் நிலையத்தின் ஆயுட்காலம் என்பது 25 ஆண்டுகள் தான். ஆனால் என்.எல்.சியில் புதிய அனல்மின் அலகுகள் கட்டுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 25 ஆண்டுகள் கழித்தும் இந்த அனல் மின் அலகுகள் மின்னுற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டன.

  இரண்டாம் அனல்மின் நிலையத்தின் முதல் மூன்று அலகுகள் ஆயுட்காலம் முடிந்த பின்னரும் செயல்படுவதற்காக சீரமைப்பு மற்ற நவீனமயப்படுத்தப்பட்டது. இருப்பினும் கூட அனைத்து அலகுகளும் மூடப்பட்டிருக்க வேண்டியவையே.

  குறிப்பாக 2018 ஆம் ஆண்டு மத்திய மின்சார ஆணையம் வெளியிட்ட தேசிய மின் திட்ட அறிக்கையில் இரண்டாம் அனல்மின் நிலையத்தின் 7 அலகுகளிலும் Flue-gas desulfurization எனப்படும் காற்று மாசு தடுப்பு தொழில்நுட்பம் பொருத்துவதற்கான வசதிகள் இல்லாததால் இவை அனைததிலும் உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

  ஆனால் என்.எல்.சி. நிர்வாகம் இந்த அலகுகளை தொடர்ச்சியாக இயக்கி வருவதால் விபத்துகள் ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  மேலும் படிக்க...

  NLC Boiler blast | என்.எல்.சி விபத்து - அனல்மின் நிலையம் முன் குவிந்த தொழிலாளர்களின்

  இதுவரை என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்துகள்

  1. நெய்வேலி மே 20, 2014 ஆம் ஆண்டு முதல் அனல் மின் நிலையத்தில் 7வது அலகில் பாய்லரில் உள்ள குழாய் வெடித்து 2 பேர் உயிரிழந்தனர் 4 பேர் படுகாயமடைந்தனர்.

  2. ஜூன் 2019 நெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தில் உள்ள ஒரு அலகில் வால்வு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

  3. மே 5 , 2020 ஆம் ஆண்டு நெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை.

  4. மே 7, 2020ஆம் ஆண்டு நெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தின் ஆறாவது அலகின் பாய்லரில் ஏற்பட்ட வெடிப்பில் 5 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

  இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது என்.எல்.சி. நிர்வாக செயல்பாடுகளில் இருக்கும் பாதுகாப்பின்மையை வெளிக்கொண்டு வந்துள்ளதாகது. உடனடியாக தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Neyveli, NLC