• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • CAA-வை வாபஸ் பெறும் வரை தொடர் போராட்டம் - மக்கள் நல கூட்டமைப்பினர் தீர்மானம்

CAA-வை வாபஸ் பெறும் வரை தொடர் போராட்டம் - மக்கள் நல கூட்டமைப்பினர் தீர்மானம்

"காரைக்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்தினை வாபஸ் பெறும் வரை தொடர்ந்து பல்வேறு ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது"

  • Share this:
    குடியுரிமை திருத்த சட்டத்தினை வாபஸ் பெறும் வரை தொடர்ந்து ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் தொடரும் என மக்கள் நல கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்

    காரைக்குடியில் ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள், தேவாலயங்களின் பங்கு தந்தைகள் கூட்டம் ஐக்கிய முஸ்லிம் ஜமாத் தலைவர் AKM. முகைதீன் பிச்சை அம்பலம் தலைமையில் நடைபெற்றது.

    Also see...ரஜினி குடியுரிமை சட்டம் குறித்து புரிதலோடு தான் பேசி வருகிறார் - எச்.ராஜா

    இக் கூட்டத்தில் அனைத்து சமுதாய மக்களையும் உள்ளடக்கிய மக்கள் நல கூட்டமைப்பு
    என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களாக அனைத்து ஜமாஅத், அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தேவாலயங்களின் பங்கு தந்தைகளில் தலா இரு நபர்கள் செயல்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இக்கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தினை வாபஸ் பெறும் வரை தொடர்ந்து பல்வேறு ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பது எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: