பிரபலங்களின் மகள்களுக்கு தொடரும் பாலியல் மிரட்டல்கள் - தீர்வு என்ன?

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் தோனியின் மகளுக்கும் இதே போல் குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

  • News18
  • Last Updated: October 21, 2020, 11:10 PM IST
  • Share this:
நடிகர் விஜய் சேதுபதி விவகாரத்தில், அவரது மகளுக்கு ஒரு பதிவர் ட்விட்டரில் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் 800 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக செய்திகள் வெளியாகின.

அதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால், படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு முத்தையா முரளிதரனே கேட்டுக்கொண்டார். அதற்கு "நன்றி, வணக்கம்" என டிவிட்டரில் விஜய் சேதுபதி பதிவிட்டார். பல்வேறு அழுததங்களுக்கு இடையே 800 படத்தில் இருந்து விலகினார்.


இந்நிலையில், விஜய் சேதுபதியை Tag செய்து ரித்திஷ் என்ற பெயரில் ட்விட்டரில் இயங்கி வரும் ஒரு நபர், அவரது மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்தார்.

அவரது ட்விட்டர் பக்க ப்ரொபைலில் நடிகர் அஜீத்தின் படம் வேறு வைக்கப்பட்டிருந்ததால் இந்தப் பதிவு தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கிரிக்கெட் வீரர் தோனியின் மகளுக்கும் இதே போல் குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார்.நடிகர் விஜய் சேதுபதி தரப்பில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை. எனினும் போலீசார், இணையத்தில் ஆபாச கருத்தை பதிவிட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

Also read... விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்விடுத்தவர் இலங்கையில் உள்ளார் - கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை



நவீன தொழில்நுட்பத்தின் வரப்பிரசாதமான சமூக வலைதளங்களை பலர் ஆக்கச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தி வரும் நிலையில் சிலர், எதிர்மறைச் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

பெயர் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட அடையாளங்களை மறைத்து உலாவ முடியும் என்ற பலவீனம் சமூக வலைதளங்களில் உள்ளதால் அதையே பலமாகப் பயன்படுத்தி சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், போலி கணக்குகளைத் தொடங்கினாலும், அவற்றின் ஐபி முகவரி மூலம் சம்பந்தப்பட்ட நபரை எளிதில் பிடித்து விட முடியும்.

கோபத்திலோ ஆத்திரத்திலோ அவதுாறு கருத்துக்களைப் பதிவிடும் முன்பு எதிராளியின் இடத்தில் நம்மை முதலில் வைத்துப் பார்த்து சிந்தித்து அதன்பின்பே சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட வேண்டும். அவதுாறு கருத்துக்களைப் பரப்பினால் 7 ஆண்டுகள் ஜாமின் இல்லாத சிறைத் தண்டனையும் காத்திருக்கிறது.

நடிகர் விஜய் சேதுபதி விவகாரம் மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் சாதாரண வாக்குவாதங்களுக்கே ஆபாச வார்த்தைகளைப் பதிவிடுவோர் தொடங்கி அவதுாறு பரப்புவோர் வரை சைபர் கிரைம் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா, சட்டத்தை உறுதியாக அமல்படுத்துவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
First published: October 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading