ரமலான்: வீட்டில் தொழுங்கள்.. கொரோனாவிலிருந்து மீண்டு வர பிரார்த்தியுங்கள் - அமைச்சர் நிலோபர் கஃபில்

ஏற்கனவே நாம் பின்பற்றிவரும் நடைமுறையை இப்போதும் பின்பற்றி வீட்டிலேயே இருந்து, வீட்டிலேயே தொழுது, இந்த நோயிலிருந்து அனைவரும் மீண்டு வர பிரார்த்தனை செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

ரமலான்: வீட்டில் தொழுங்கள்.. கொரோனாவிலிருந்து மீண்டு வர பிரார்த்தியுங்கள் - அமைச்சர் நிலோபர் கஃபில்
நிலோபர் கஃபில்
  • Share this:
ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், முஸ்லிம்கள்  பள்ளிவாசலுக்குச் செல்லாமல் வீட்டில் தொழுவதையே தொடருங்கள் என்று அமைச்சர் நிலோபர் கஃபில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தொற்று நோய் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இந்த ஆண்டு ரம்ஜான் மாதம் வந்துள்ளது.

இந்த நிலையில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். மற்ற மாநிலங்களில் உள்ளது போல் நாமும் பள்ளிவாசல்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே தொழுது வருகின்றோம்.


எனவே நாளை முதல் ரம்ஜான் நோன்பு ஆரம்பிக்க உள்ளது. இதில் ஏற்கனவே நாம் பின்பற்றிவரும் நடைமுறையை இப்போதும் பின்பற்றி நோன்பு சஹர், இஃப்தார் வீட்டிலேயே இருந்து செய்து தராவீஹ் வீட்டிலேயே தொழுது இந்த நோயிலிருந்து அனைவரும் மீண்டு வர இறைவனை கையேந்தி துஆ செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

2020ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் நோன்பு காலத்தில் அளிக்கப்படும் ரம்ஜான் அரிசி உள்ளிட்ட அனைத்தையும் பள்ளிவாசல்களுக்கு வழங்க, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்து, சிறுபான்மை மக்களுக்கு வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

இவற்றை அளிக்கும்போது ஒரே இடத்தில் கூட்டம் கூட கூடாது என்பதற்காகவும், பள்ளிவாசல்களில் எக்காரணத்தைக் கொண்டும் நோன்பு கஞ்சி காய்ச்சக் கூடாது என்பதற்காக, அதனை ஏழை எளிய மக்களுக்கு பிரித்து அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.மேலும் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் இஃப்தார் விருந்து அளித்து வந்தது. தற்போது இந்த ஆண்டு அதனை நடத்த முடியாத ஒரு சூழ்நிலையையும் ஏற்பட்டு இருப்பதால், இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் இருந்து தொழுகைகளை வீட்டிலேயே நடத்தி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:
First published: April 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading