திருநெல்வேலியில் கூடுதல் விலைக்கு பீர் விற்ற தனியார் பாருக்கு ரூ.15,000 அபராதம்!

திருநெல்வேலியில் கூடுதல் விலைக்கு பீர் விற்ற தனியார் பாருக்கு ரூ.15,000 அபராதம்!
மாதிரிப் படம்
  • Share this:
திருநெல்வேலியில் கூடுதல் விலைக்கு பீரை விற்ற தனியார் பாருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக வசூலித்த தொகையுடன், அபராத தொகையை நுகர்வோருக்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளது.

திருநெல்வேலி மேகபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். சட்ட ஆலோசகராக பணியாற்றி வரும் இவர், கடந்த 2017-ம் ஆண்டு அமிர்தம் என்ற தனியார் பாரில் 2 பீர்களை குடித்துள்ளார். பீரின் விலை 120 ரூபாய் என பாட்டிலில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தனியார் பார் நிர்வாகமோ, பீர் ஒன்றுக்கு 241 ரூபாய் வீதம் 482 ரூபாய் வசூலித்துள்ளது. இது குறித்து கேட்டபோது, பார் நிர்வாகம் உரிய பதில் அளிக்காததை அடுத்து, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வெங்கடேஷ் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, முறையற்ற மற்றும் நேர்மையற்ற வணிகத்தில் ஈடுபட்டதாக தனியார் பாருக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், வழக்கு செலவு மற்றும் பீருக்கு கூடுதலாக வசூலித்த தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்குமாறு, தனியார் பார் உரிமையாளர், மேலாளர் மற்றும் கலால் பிரிவு உதவி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர். எத்தனையோ பொருட்களை எம்.ஆர்.பி. விலைக்கும், அதிகமான தொகையை கொடுத்து பொதுமக்கள் வாங்கி வரும் நிலையில், வெங்கடேஷ் தொடர்ந்த வழக்கு, பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.


Also see:

 
First published: January 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்