குழந்தைகள் இணைய அடிமையாவதை தடுக்க அரசு மருத்துவமனையில் ஆலோசனை வழங்கப்படும்: தமிழக அரசு

மாதிரிப் படம்

'சற்றே குறைப்போம்' என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு சர்க்கரை, உப்பு, எண்ணெய் பயன்பாடு படிப்படியாக குறைப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    குழந்தைகள் இணைய அடிமையாவதை தடுக்க அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மனநல நிபுணர் குழுவால் சிறப்பு ஆலோசனை வழங்கப்படும் உட்பட 110 புதிய அறிவிப்புகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டன.

    தமிழக சட்டப்பேரவையில் இன்று  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், 110 புதிய அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அதில் முக்கியமான அறிவிப்புகள் பின்வருமாறு:

    25 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 18 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலா ரூபாய் 2.27 கோடி வீதம் பன்முக உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 97.49 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.  ஊரகப் பகுதியில் உள்ள 2400 துணை சுகாதார நிலையங்கள் நலவாழ்வு மையங்களாக ரூ35. 52 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

    கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்த 2400 செவிலியர்கள், 2448 சுகாதார ஆய்வாளர்கள், ரூ.17. 42 கோடி செலவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். முதியோர் மனநலம் காக்க அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முதியோர் மறதி நோய்க்கான தனி சிகிச்சை பிரிவு தொடங்கப்படும். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் இந்திய முறை மருத்துவ மருந்துகளும் வழங்கப்படும். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் ஆண்டுக்கு 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் அதிகரிப்பு!


    குழந்தைகள் இணைய அடிமை நோய்க்கு ஆளாவதை தடுக்க, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மனநல நிபுணர் குழுவால் சிறப்பு ஆலோசனை வழங்கப்படும். *முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2020 ஜனவரி முதல் மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான நடப்பாண்டில் ரூபாய் 1248. 29 கோடி செலவிடப்படும்.

    மேலும் படிக்க: முதல்வர் தனிப் பிரிவில் மனு அளித்தால் சொந்த வீடு: வதந்தியால் அலைமோதிய கூட்டம்!


    விடுதிகள், விழா காலங்களில் உபரி உணவை வீணாக்காமல் பயன்படுத்த பரீட்சார்த்த ரீதியாக 10 மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊக்கப் படுத்தப்படும். ’சற்றே குறைப்போம்' என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு சர்க்கரை, உப்பு, எண்ணெய் பயன்பாடு படிப்படியாக குறைப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 10 மாவட்டங்களில் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் ரூ.2.35 கோடி செலவில் நிறுவப்படும்

    முதல் முறையாக தமிழ்நாட்டில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை 'அரிய வகை இரத்த சிவப்பணுக்கள் உறைநிலை சேமிப்பு அலகு' ரூ. 3.75 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: