அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக வரும் ஜூன் 14-ம் தேதி, தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் 23.6.2022 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், நடைபெற உள்ளது.
கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடத்துவது சம்பந்தமாக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் 14.6.2022 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தின் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.