'சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்னர் அனைத்து தரப்பு மக்களிடம் கருத்து கேட்கவேண்டும்..' - தமிழச்சி தங்கபாண்டியன்..
'சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்னர் அனைத்து தரப்பு மக்களிடம் கருத்து கேட்கவேண்டும்..' - தமிழச்சி தங்கபாண்டியன்..
தமிழச்சி தங்கபாண்டியன்..
சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்னர் அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னை கொத்தவால்சாவடியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார பயணத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாமக போரட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, பாமக போரட்டம் என்பது அரசும் பாமகவும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்று கூறினார். அதன் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்னர் அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்க வேண்டும் என்று கூறினார்.
விவசாயிகளின் போராட்டம் குறித்த கேள்விக்கு, விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி ஸ்தம்பித்துபோய் உள்ளது. கனடா பிரதமர் கூட விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். தன்னை தானே விவசாயி என கூறிக்கொள்ளும் முதல்வர் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் திமுக வேளாண் திருத்தச் சட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்றார்.
மேலும் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார பயணத்திற்கு மக்கள் தரும் ஆதரவு வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-வின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது என்று கூறினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.