கருணாநிதி பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம்: திருமாவளவன் வேண்டுகோள்

கோப்புக் காட்சி

தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் தொண்டாற்றிய கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் அவர் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

 • Share this:
  மறைந்த திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றை துவங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் அரும்பெரும் தொண்டாற்றிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் தமிழ்நாட்டில்  மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் துவக்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் , தமிழ்நாட்டில் எத்தனையோ பல துறைகளுக்கெனத் தனித்தனியே பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு அவையாவும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. ஆனால், மொழியியலுக்கென தனியே பல்கலைக்கழகம் ஏதும் இல்லை என்று கூறியுள்ள திருமாவளவன், உலகின் பல்வேறு மொழிகளைக் கற்பிக்கவும், இந்திய மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், மொழிபெயர்ப்புகளை ஊக்குவிக்கவும், உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து ஆராய்ச்சிக் கல்வி பயிலுவோர் இந்தியாவுக்கு வந்து மொழியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் ஏதுவான வகையில் தமிழ்நாட்டில் பொருத்தமானதொரு இடத்தில், கலைஞரின் பெயரில் அந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

  இதையும் படிங்க: காண கிடைக்காத கலைஞர் கருணாநிதியின் அரிய புகைப்படங்கள்!


  ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்திருக்கும் ‘ மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகத்தை ( Moscow State Linguistic University ) முன்மாதிரியாகக் கொண்டு அந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கலாம் என்று  யோசனை தெரிவித்துள்ளார்.  இந்த கோரிக்கையை தமிழக முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுகொண்டுள்ளார்.

  மேலும் படிக்க: ஓயாத உழைப்பாளி... ஒப்பற்ற படைப்பாளி...! கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் இன்று

  Published by:Murugesh M
  First published: