தொகுதிப் பங்கீடு: திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை

தொகுதிப் பங்கீடு: திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை

பாலகிருஷ்ணன்

திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Share this:
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலையத்தில் தொடங்கியுள்ளது.

இதில், திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுக தரப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சிபிஎம் தரப்பில், 10 தொகுதிகள் கேட்க இருப்பதாகவும், 6 அல்லது 7 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்ய முன்வரும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகின்றது. அதன்படி, திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள் சட்சியுடன் நடத்திய, தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாத்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும், அதேபோல மதிமுகவுடனும் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

Must Read: திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

இந்நிலையில், நாளை காங்கிஸ் கட்சியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கின்றது.  இதைத் தொடர்ந்து விரைவில் தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Published by:Suresh V
First published: