அதிமுக - தேமுதிக இடையே நீடிக்கும் இழுபறி.. கொங்குமண்டல தொகுதிகளை பாஜக கேட்பதால் இருதரப்புக்கு இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை..

Youtube Video

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், இழுபறி நீடிக்கிறது.

 • Share this:


  சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கு இணையான தொகுதிகளை தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.   இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில், அதிமுக - தேமுதிக சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

  இதில் அதிமுக தரப்பில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, தேமுதிக சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ், இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  அப்போது தங்கள் கட்சிக்கு 20 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படி இல்லையெனில், 15 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

  மேலும் படிக்க...மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக காண விரும்புகிறேன் - குலாம் நபி ஆசாத்
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: