• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிக்கலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி... அடுத்தடுத்து குவிந்த புகார்கள்...

சிக்கலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி... அடுத்தடுத்து குவிந்த புகார்கள்...

Youtube Video

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் இரண்டு புதிய முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தோல் பை வாங்கியதிலும், பட்டாசு வாங்கி கட்டாயப்படுத்தி விற்பனை செய்ததிலும் முறைகேடு என்ற குற்றச்சாட்டு உண்மையா?

  • Share this:
    கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தார் ராஜேந்திர பாலாஜி 2019-2020 நிதியாண்டில் தீபாவளியை ஒட்டி, தலைமைச் செயலக அதிகாரிகள், ஆவின் அதிகாரிகளுக்கு லெதர் பேக் வாங்கி பரிசளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆவின் நிறுவன ஆவணங்களின் படி, பரிசளிக்க சுமார் 49 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட லெதர் பேக்குகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பல்வேறு விதி மீறல்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

    பேக்குகளை சப்ளை செய்த நிறுவனங்கள் மற்றும் ஆவின் நிறுவனத்திற்கும் இடையே தகவல் பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் இல்லை என்று தணிக்கைத் துறையின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. லெதர் பேக் வாங்கும் என்ற ஒற்றைத் திட்டத்தை ஆறு ஆக பிரித்து செயல்படுத்தியதன் மூலம் வெளிப்படைத்தன்மை இல்லை என்கிறது தணிக்கைத்துறை.

    லெதர் பேக்குகளை சப்ளை செய்ய நிறுவனங்களை தேர்வு செய்த முறை மற்றும் அவற்றின் தகுதி குறித்த தரவுகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. தீபாவளி பரிசாக விஐபிக்களுக்கு லெதர் பேக் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், பரிசு பெற்றவர்களின் பட்டியல் எங்கும் இல்லை என்றும் தணிக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

    பரிசு பெற்றவர்களின் பட்டியல் இல்லாததால், உண்மையில் லெதர் பேக் வாங்கப்பட்டதா? வினியோகம் செய்யப்பட்டதா? என்று சந்தேகம் எழுகிறது. இலவசமாய் பட்டாசு வாங்கி பால் உற்பத்தியாளர்களிடம் அதிக விலைக்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்து பலகோடி ரூபாய் ஆதாயம் அடைந்த ராஜேந்திர பாலாஜி.

    லெதர் பேக் முறைகேடு குற்றச்சாட்டு ஒருபக்கம் இருக்க, குறைந்த விலைக்கு பட்டாசுகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்ய வற்புறுத்தியதாக அடுத்த புகார் எழுந்துள்ளது.

    கடந்த ஆட்சியில் 2016, 2017, 2018, 2019 ஆகிய நான்கு ஆண்டுகள் தீபாவளியை முன்னிட்டு வெறும் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை வாங்கி, பால் உற்பத்தியாளர்களிடம் சுமார் 400 ரூபாய்க்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க...வேகமாக பரவும் டெங்கு.. கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் என்ன வித்தியாசம்?

    அமைச்சரின் உத்தரவின் பேரில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களிடம் அதிகவிலைக்கு பட்டாசு கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகார்கள் குறித்து விளக்கம் கேட்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தொடர்பு கொண்டபோது அவரது எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.



    இந்த முறைகேடு புகார்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார் தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர். எது நடந்தாலும் பத்திரிகையாளர்களை சந்தித்து வெளிப்படையாக பேசுவது ராஜேந்திர பாலாஜிக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்த நிலையில், அடுத்தடுத்து முறைகேடு புகார்கள் எழுந்துவரும் நிலையில், ராஜேந்திர பாலாஜி மெளனம் காப்பது ஏனோ?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: