முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சிலிண்டர் விலை உயர்வு: ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்திய மகளிர் காங்கிரஸ்!

சிலிண்டர் விலை உயர்வு: ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்திய மகளிர் காங்கிரஸ்!

மகளிர் காங்கிரஸ் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்

மகளிர் காங்கிரஸ் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்

எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் மகளிர் காங்கிரசார்  ஒப்பாரி வைத்து  போராட்டம் நடத்தினார்கள்...

  • 1-MIN READ
  • Last Updated :

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இம்மாதம் 147 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டு, தற்போது அதன் விலை 881 ரூபாயாக உள்ளது. இதைக் கண்டித்து புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றுள்ளது.

மத்திய பாஜக அரசின் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மகளிரணியினர் புதுச்சேரி காமராஜர் சிலை முன், சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விலை உயர்வு செய்த பாஜக அரசாங்கத்தைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரசார் பங்கேற்றனர்.போராட்டத்தை புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Also see:

First published:

Tags: Fuel Price, Gas Cylinder Price