திமுகவிடம் இருந்து தேவையான தொகுதிகளை கேட்டு பெறுவோம்: கே.எஸ். அழகிரி

கே.எஸ். அழகிரி

திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி கூட்டணி என்றும், இந்த கூட்டணி வெற்றிகரமாக செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையில் உள்ளதாக அழகிரி தெரிவித்தார்.

 • Share this:
  திமுகவிடம் இருந்து தேவையான தொகுதிகளை கேட்டு பெறுவோம் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

  கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் காங்கிரஸ் சார்பில், விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  மாநாட்டில் உரையாற்றிய கே.எஸ்.அழகிரி, திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி கூட்டணி என்றும், இந்த கூட்டணி வெற்றிகரமாக செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். தோழமைக்கு அழகு சுமூகமாக இருப்பதுதான் என தெரிவித்த அவர், திமுகவிடம் தேவையான தொகுதிகளை கேட்டு பெறுவோம் எனவும் கூறினார்.


  திமுக கூட்டணியிடம் இருந்து தொகுதிகளை அதிகமாக கேட்கமாட்டோம் என தெரிவித்த அழகிரி, அதே நேரத்தில் குறைவான தொகுதிகளை பெற மாட்டோம் என்றார்.
  Published by:Yuvaraj V
  First published: