ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சட்டமன்றத்தில் இன்று.. ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் காங்கிரஸ்...!

சட்டமன்றத்தில் இன்று.. ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் காங்கிரஸ்...!

ஆளுநருக்கு எதிராக தீர்மானம்

ஆளுநருக்கு எதிராக தீர்மானம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற திராவிட மாடல் உள்ளிட்ட சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக, முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறினார்.

இரண்டாவது நாளான நேற்று எம்எல்ஏ திருமகன் ஈவெரா உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது, கேள்வி நேரத்துக்குப் பிறகு, ஆளுநர் உரைக்கு நன்றி தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அதன் மீதான விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் பதிலளிக்க உள்ளார்.

இந்நிலையில், ஆளுநர் தனது உரையின்போது, பல்வேறு வார்த்தைகளை படிக்காமல் விட்டதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் தனி தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இதனை இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் உறுதியளித்ததாக காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Congress, RN Ravi, TN Assembly