கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் தொண்டர்!
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக நிற்கிறார்.

காங்கிரஸ்
- News18
- Last Updated: April 2, 2019, 8:16 PM IST
மானாமதுரை பகுதியில் முதுகு தலைக்குப் பின்னால் கை சின்னத்தை வரைந்து நூதன முறையில் காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னர் தெருவைச் சேர்ந்தவர் பிரபு(44), தச்சுவேலை செய்து வருகிறார்.
இவருடைய தந்தை பரஞ்ஜோதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். பல பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.
இவருடைய அப்பா பரஞ்ஜோதி இறந்த பிறகு தச்சு தொழில் செய்து கொண்டு கட்சியில் தீவிரமாக இருந்து வந்து உள்ளார்.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் அந்த தொகுதியில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக நிற்கிறார்.இவர் அறிவிக்கப்பட்டதில் இருந்து தீவிரமாக மக்களிடத்தில் ஆதரவு கேட்டு வரும் பிரபு, அவருடைய முதுகில் காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னத்தையும், முடியை வெட்டி அதில் கை சின்னத்தை டிசைன் செய்து சட்டை போடாமல் வீதியில் வலம் வருகிறார்.

இது குறித்து பிரபு கூறும்போது, “எங்கள் குடும்பம் தீவிரமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குடும்பம் என் தந்தை இறப்புக்கு ஆறுதல் கூற வந்தவர் ப.சிதம்பரம். தற்போது அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் நிற்பதால் அவர் வெற்றிபெற வேண்டும்.
படித்த இளைஞர்கள் அதிகம் பேர் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள். கார்திக் சிதம்பரம் வெற்றிபெற்று, அவர்களுக்கு வேலை உருவாக்கித் தர வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக மக்களிடத்தில் ஆதரவு கேட்டு வருகின்றேன்” என்று கூறுகிறார்.
மேலும் பார்க்க:
ஐ.பி.எல் தகவல்கள்

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
ஐ.பி.எல் தகவல்கள்