தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளன. தொகுதி பங்கீடு முடிந்தநிலையில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் வேட்பாளர்களையும் முடிவு செய்து அறிவித்துள்ளன. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸில் பணக்காரர்களாக பார்த்து வேட்பாளர்களாக அறிவிக்கப்படுகின்றனர் என்று கூறி காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
அவருக்கு ஆதரவாக எம்.பி ஜோதிமணியின் ட்விட்டர் பதிவில், ‘காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை.நிறைய
தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை. எனது தலைவர் ராகுல் காந்தி பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம்.பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னாள் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விஷ்ணு பிரசாத்தை கே.எஸ்.அழகிரி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தநிலையில், காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா ட்விட்டர் பதிவில், ‘தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொகுதி, வேட்பாளர் தேர்வு பல்வேறு கட்டங்களாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றுள்ளன. தனிப்பட்ட எந்த தலைவரும் முடிவெடுக்க முடியாத நிலையில் எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லாத ஜனநாயக நடைமுறையை கொச்சைப்படுத்துவது அப்பட்டமான கட்சி விரோத செயல் அல்லவா ?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொகுதி, வேட்பாளர் தேர்வு பல்வேறு கட்டங்களாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றுள்ளன. தனிப்பட்ட எந்த தலைவரும் முடிவெடுக்க முடியாத நிலையில் எந்த தவறு நடக்க வாய்ப்பில்லாத ஜனநாயக நடைமுறையை கொச்சைப்படுத்துவது அப்பட்டமான கட்சி விரோத செயல் அல்லவா ?
வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக கருத்துக்களை பரப்பி நமது தலைவர்களை நாமே களங்கப்படுத்தலாமா ? 2014 மக்களவைத் தேர்தலில் டெபாசிட் இழந்த ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்கிய தலைவர்களை இழிவுபடுத்தலாமா ?
கடந்த 2016 கரூர் சட்டமன்றத் தேர்தலில் 401 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பேங்க் சுப்பிரமணியத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சண்டித்தனம் செய்து பழிவாங்கிய ஜோதிமணி தொண்டர்களுக்காக ரத்தம் கொதிப்பதாக கூறுவுது ஒரு அரசியல் மோசடி. ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்துகிற ஜோதிமணி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.