காங்கிரஸ் கட்சியில், கடைநிலை தொண்டனும் தலைவரை தொடர்பு கொள்ளும் நிலையை உருவாக்குவேன், என தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிடுகின்றனர். போட்டியிடுகின்றனர். தமிழக நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக சசி தரூர் சென்னை வந்துள்ளார். தமிழகம் வந்த சசிதரூர், சைதாப்பேட்டையில் உள்ள ராஜிவ்காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி, காமராஜர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சசிதரூர், தமிழகத்திற்கு வருகை தந்து ராஜிவ்காந்தி சிலைக்கு மரியாதை செலுத்துவது பெருமையாக உள்ளது. அதே போல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காமராஜரின் பங்கு தமிழகத்திற்கு பங்கு அதிகமானது. குறிப்பாக, மலைவாழ் மக்கள் வளர்ச்சியில், கல்வி வளர்ச்சி போன்றவைகளில் மிகப்பெரிய பங்கு உள்ளது. இதனால் ஆதரவு கேட்டு வருகை தந்துள்ளேன். சரிந்துள்ள காங்கிரஸ் கட்சியை வலுபடுத்துவேன், புத்துயிர் படுத்துவேன் என உறுதியளித்தார்.
இதுவரை அடிமட்ட தொண்டர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. குறிப்பாக இளைஞர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது. இதில் நான் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன். தனக்கு பிரச்சாரம் மேற்கொள்ள, நேரம் குறைவாக உள்ளது. இதனால் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் என பல விதங்களில் ஆதரவு கோரிவருகிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், ராகுல் காந்தியின் நடைபயணம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நடைபயணத்திற்கு செல்லும் இடங்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வதுடன் பங்கேற்கின்றனர் என கூறினார். காந்தியின் குடும்பம் கார்க்கேக்கு ஆதரவு அளித்து வருவதாக சமூக வளைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். ஆனால் காந்தி குடும்பம் இதுவரை அதிகாரப்பூர்வமாக யாருக்கு ஆதரவு என்று தெரிவிக்கவில்லை.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் ஜனநாயகமுறைப்படி நடைபெறும். அதில் யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ்க்கு தான் அந்த வெற்றி எனவும், தமிழக காங்கிரஸ் கமிட்டியிடம் ஆதரவு கோருகிறேன். தமிழில் மொழிபெயர்ந்து தனது பிரச்சாரத்தை முன்வைப்பேன் என கூறினார். இந்த உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதும், கட்சியின் அடிப்படையில் சில மாற்றங்களை கொண்டு வந்து, நிர்வாகிகளை நியமிப்பேன். கட்சியின் அரசியலமைப்பு வலுவாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, RahulGandhi, Shashi tharoor, Sonia Gandhi