நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி? கே.எஸ். அழகிரி பேச்சால் சர்ச்சை

நாங்குநேரியில் உள்ள திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி? கே.எஸ். அழகிரி பேச்சால் சர்ச்சை
கே.எஸ்.அழகிரி (கோப்பு படம்)
  • Share this:
நாங்குநேரி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா என்று காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் அரங்கில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற வசந்தகுமார், தனது நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இத்தொகுதியில் போட்டியிடுவதற்கு, திமுக அண்மைக்காலமாக விருப்பம் தெரிவித்து வருகிறது. அண்மையில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாங்குநேரி தொகுதியை திமுகவிற்கு காங்கிரஸ் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றார்.


இந்நிலையில், நாங்குநேரியில் உள்ள திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி. வசந்தகுமார், பீட்டர் அல்போன்ஸ், சஞ்சய் தத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, பேசிய நிர்வாகிகள், நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் எனவும், உள்ளூர் வேட்பாளர்களுக்கு சீட்டு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனைதொடர்ந்து, நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் எனவும், காங்கிரஸ் வேட்பாளரை ஒருமனதாக வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக பேசிய கே.எஸ்.அழகிரி, தென் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலமாக இருப்பதாக கூறினார். எனவே தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா என நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பினார். மேலும் 50 ஆண்டுகளாக தமிழகத்தில் எதிர்கட்சியாகவே உள்ளோம் என்று குறிப்பிட்ட அழகிரி, கட்டுப்பாடற்ற தொண்டர்களால் தான் நாம் வெற்றிபெற முடியவில்லை என்றார்.

கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சிதான் போட்டியிட வேண்டும் என்றனர்.

Loading...

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, தேர்தல் தேதி அறிவித்த பிறகு, கூட்டணிக் கட்சியினருடன் ஆலோசனை நடத்தி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவுசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Also Watch

First published: September 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...