• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நாட்டின் மிகச்சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் - காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் புகழாரம்

நாட்டின் மிகச்சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் - காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் புகழாரம்

மு.க.ஸ்டாலின் குலாம் நபி ஆசாத்

மு.க.ஸ்டாலின் குலாம் நபி ஆசாத்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பாராட்டியுள்ளார்.

  • Share this:
    நாட்டின் மிகச்சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பாராட்டியுள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் இன்று சென்னை வந்தார். அவர் மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மக்களவை எம்.பி.யும், திமுக மகளிரணித் தலைவருமான கனிமொழி, எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    பின்னர் கனிமொழியின் தாயார் ராஜாத்தியம்மாளையும் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், ‘நாட்டின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரது செயல்பாடுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றன. நாளொன்றுக்கு முதல்வர் ஸ்டாலின் 18 முதல் 19 மணி நேரம் உழைக்கிறார். தந்தை கருணாநிதி போலவே மகனும் இருக்கிறார்' என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: