• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சுந்தர் சி அழுத்தம் காரணமாகவே குஷ்பு பா.ஜ.கவில் இணைந்தார் - காங்கிரஸ் தலைவர் விமர்சனம்

சுந்தர் சி அழுத்தம் காரணமாகவே குஷ்பு பா.ஜ.கவில் இணைந்தார் - காங்கிரஸ் தலைவர் விமர்சனம்

குஷ்பு, கோபண்ணா

குஷ்பு, கோபண்ணா

சுந்தர் சியின் அழுத்தம் காரணமாகவே குஷ்பு பா.ஜ.கவில் இணைகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கோபண்ணா தெரிவித்துள்ளார்.

  • Share this:
    காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் கடந்த சில மாதங்களாக குஷ்பு ஈடுபாடு காட்டமலேயே இருந்துவந்தார். மேலும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தநிலையில், குஷ்பு ஆதரவு தெரிவித்தார். அதனையடுத்து, அவர் பா.ஜ.கவில் இணையவுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்தது. இருப்பினும், அந்த தகவலை குஷ்பு உறுதியாக மறுத்துவந்தார். இந்தநிலையில், அவர் பா.ஜ.க இணைகிறார் என்று நேற்று உறுதியாக தகவல்கள் வந்தன. அதற்காக, அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்தநிலையில், இன்று காலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டார். அதனையடுத்து, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பு ராஜினாமா செய்தார். இந்தநிலையில், சற்று நேரத்துக்கு முன்னர் குஷ்பு பா.ஜ.கவில் இணைந்தார்.

    குஷ்பு காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைவது குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா, ‘காங்கிரஸின் கொள்கை ஏற்றுக் கொண்ட குஷ்பு எப்படி பாஜகவின் கொள்கையை ஏற்றுக் கொண்டார் என்பது தெரியவில்லை. சுந்தர் சி நிர்பந்தம் காரணமாகவே குஷ்பு பாஜகவில் இணைகிறார்.

    காலம் முழுவதும் எந்த கொள்கைக்காக குஷ்பு வாழ்ந்தாரோ, அந்த கொள்கையை அவரது கணவருக்காக பா.ஜ.கவிடம் அடகு வைத்துவிட்டு சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக குஷ்பு மாறியிருக்கிறார். ஏதோ ஒரு வகையில் ஆளும் கட்சியுடன் நிர்பந்தம் செய்யப்பட வேண்டிய நிலை, சுந்தர் சிக்கு ஏற்பட்டு இருக்கிறது.


    அவர் கட்சியில் இருந்து விலகுவதால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பா.ஜ.கவில் சேர்வதால் பாஜகவுக்கும் எந்த பலனும் ஏற்படாது’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: