ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நள்ளிரவில் வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்.. வாரிசுகளுக்கு வாய்ப்பு..

நள்ளிரவில் வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்.. வாரிசுகளுக்கு வாய்ப்பு..

காங்கிரஸ்

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்னரே நேற்று அக்கட்சித் தலைவர்கள் பகிரங்கமாக வேட்பாளர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக நேற்று சத்தியமூர்த்தி பவனில் போராட்டமும் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் திமுக கூட்டணியில் 25 தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி நேற்றிரவு 21 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. மேலும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்னரே நேற்று அக்கட்சித் தலைவர்கள் பகிரங்கமாக வேட்பாளர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக நேற்று சத்தியமூர்த்தி பவனில் போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்றிரவு 21 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி

1. பொன்னேரி (SC ) - துரை சந்திரசேகர்,

2. ஸ்ரீபெரும்புதூர் - செல்வப்பெருந்தகை

3. சோளிங்கர் - ஏ.எம்.முனிரத்னம்

4. ஊத்தங்கரை (SC) - ஜே.எஸ்.ஆறுமுகம்

5. கள்ளக்குறிச்சி (SC) - மணிரத்னம்

6. ஓமலூர் - ஆர்.மோகன் குமாரமங்கலம்

7. ஈரோடு கிழக்கு - திருமகன் ஈவேரா

8. உதகை - ஆர்.கணேஷ்

9. கோவை தெற்கு - மயூரா எஸ்.ஜெயக்குமார்

10. உடுமலைப்பேட்டை - கே.தென்னரசு

11. விருதாச்சலம் - எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன்

12. அறந்தாங்கி - எஸ்.டி.ராமச்சந்திரன்

13. காரைக்குடி - எஸ்.மாங்குடி

14. மேலூர் - டிரவிச்சந்திரன்

15. ஸ்ரீவில்லிபுத்தூர் (SC)-பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ்

16. சிவகாசி - அசோகன்

17. திருவாடானை - ஆர்.எம்.கருமாணிக்கம்

18. ஸ்ரீவைகுண்டம் - ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்

19. தென்காசி - எஸ்.பழனி நாடார்

20. நாங்குநேரி - ரூபி ஆர்.மனோகரன்

21. கிள்ளியூர் - எஸ்.ராஜேஷ்குமார்

ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்

காங்கிரஸ்

மேலும் கன்னியாகுமரி தொகுதியில் எம்.பியாக இருந்த காங்கிரஸின் ஹெச்.வசந்தகுமார் காலமானதால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியும் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமர் எம்.பி தொகுதியின் வேட்பாளராக மறைந்த முன்னாள் எம்.பி வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்த வாரிசுகள்:

திருவாடானையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே ஆர் ராமசாமியின் மகன் கரியமாணிக்கம் போட்டியிடுகிறார்.

அறந்தாங்கியில் திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி ராமச்சந்திரன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டிடுகிறார்.

ஓமலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம் போட்டியிடுகிறார்

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிடுகிறார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.

முன்னதாக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை கண்டித்து நேற்று ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினர் விஷ்ணு பிரசாத் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து கரூர் தொகுதி எம்.பி ஜோதிமணி பணம் கொடுப்பவர்களுக்கு தான் காங்கிரஸ் கட்சி சீட் வழங்குவதாக கடுமையான குற்றச்சாட்டை தனது ட்விட்டரில் பதிவிட்டார். இது பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே விஷ்ணு பிரசாத்தின் போராட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் சிலர் விளம்பரத்திற்காக காங்கிரஸ் இயக்கத்துக்கு மிக பெரிய இழிவை ஏற்படுத்தி எதிரிகளுக்கு உதவும் துரோகிகளை கண்டுகொள்ளுங்கள் என பதிவிட்டு அதிர வைத்தார்.

Published by:Arun
First published:

Tags: Congress, Election 2021, TN Assembly Election 2021