Home /News /tamil-nadu /

சென்னை வந்தார் ராகுல் காந்தி... காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை வந்தார் ராகுல் காந்தி... காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Rahul Gandhi | கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ள ராகுல் காந்தி இன்று சென்னை வந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் 'பாரத் ஜோடோ யாத்திரா' என்ற பெயரில் 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். வருகிற 7ஆம் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து அவர் நடை பயணத்தை தொடங்குகிறார்.

    நடை பயணத்தை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தேசிய கொடியை அவரிடம் வழங்கி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலுக்கு நடந்தே செல்கிறார்.அங்கு நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு அவர் நடை பயணத்தை தொடங்குகிறார். இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரியில் தங்குகிறார்.

    கன்னியாகுமரியில் நடைபயணத்தை நாளை ராகுல் காந்தி தொடங்க உள்ளதால் ராகுல் காந்தி இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    இதனிடையே ராகுல் காந்தியும் அவருடன் பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் தலைவர்களும் தங்குவதற்காக படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிவறை மற்றும் அனைத்து வசதிகளும் கொண்ட கேரவன்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக 60 கேரவன்கள் கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்திற்கு வந்துள்ளது. இந்த 60 கேரவன்களும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த 60 கேரவன்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை செல்லும் போது அவர்களை பின் தொடர்ந்து செல்லும்.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: Congress, Rahul gandhi

    அடுத்த செய்தி