முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்றையதினம் விடுதலை செய்தது, இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம். கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள்.
அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்கிற குரல் ஏன் எழவில்லை? அவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா? ராஜிவை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும். நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் இன்று (வியாழக்கிழமை) காலை காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு 'வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது' என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு அறப்போராட்டம் நடத்துமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன்படி, தமிழகம் முழுவதும், காங்கிரஸ் கட்சியினர் தங்கள் பகுதியில் வாயில் வெள்ளை துணி கட்டி, சென்னை சத்திய மூர்த்தி பவன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மெளனப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சிதம்பரத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள நேரு சிலை முன்பாக மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் வாயில் வெள்ளை துணி கட்டி மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Must Read : போலீஸ் ஸ்டேஷனில் பெண்ணை அடித்து துன்புறுத்தல்.. சப் இன்ஸ்பெக்டர், 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்
இந்நிலையில், முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளனை விடுதலை செய்ததை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை எதிர்க்கக் கூடாது என்ற நோக்கிலேயே மௌன போராட்டம் நடத்துவதாக மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேருந்து நிலையம் அருகில், தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான காங்கிரசார் வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் பாஷா தலைமையில், வன்முறையை எதிர்ப்போம், கருத்து மாறுபாடுகளுக்கு கொலை தீர்வல்ல, என்ற வாசகத்தை கையில் ஏந்தியவாறு வாய் முகம் ஆகிய இடங்களில் வெள்ளைத் துணியால் மறைத்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் பங்கேற்றனர். இதேபோல தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, KS Alagiri, Perarivalan