ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சட்டமன்ற தேர்தலில் திமுகவிடமிருந்து 60 தொகுதிகளை கேட்டுப் பெற காங்கிரஸ் திட்டம்?

சட்டமன்ற தேர்தலில் திமுகவிடமிருந்து 60 தொகுதிகளை கேட்டுப் பெற காங்கிரஸ் திட்டம்?

கோப்புப்படம்

கோப்புப்படம்

காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளாக கருதப்படும் 80 தொகுதிகளின் பட்டியலை அக்கட்சி தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகியுள்ள காங்கிரஸ் கட்சி, வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருதும் 80 தொகுதிகளின் பட்டியலை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  தமிழகத்தில் தற்போதைய அரசின் ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு மே 15ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகிவருகின்றன. திமுக 200 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டுவரும் நிலையில், இதனால் கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடி வரும் என்ற கருத்தும் அந்தந்த கட்சிகளிடையே எழுந்துள்ளது.

  கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளாக கருதப்படும் 80 தொகுதிகளின் பட்டியலை அக்கட்சி தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த 80 தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் மேலிடத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  திமுகவிடம் குறைந்தது 60 தொகுதிகளையாவது கேட்டுப் பெற வேண்டுமென காங்கிரஸ் தீர்மானமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 5 தொகுதிகள், கன்னியாகுமரி, கடலூரில் தலா 4 தொகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் 2 தொகுதிகளை வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளாக காங்கிரஸ் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  Also read: உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்த திருப்பூர் காவலர்... குவியும் பாராட்டுகள்

  காங்கிரஸ் கட்சிக்கு தென் மாவட்டங்கள் அதிக வெற்றி வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்ற 8 இடங்களில், 6 தொகுதிகள் தென்மாவட்டங்களில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி கட்சியின் ஆதரவு முழுமையாக கிடைக்கவில்லை என்பது, அவர்களின் வாக்கு சதவீதத்தை பார்த்தே அறிந்துகொள்ள முடிவதாக கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் டி.ராமகிருஷ்ணன்.

  தமிழகத்தில் விரைவில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Rizwan
  First published:

  Tags: Congress alliance, TN Assembly Election 2021