• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உ.பி அரசை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் தொண்டர்கள் நூதன போராட்டம்!

உ.பி அரசை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் தொண்டர்கள் நூதன போராட்டம்!

congress

congress

பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Share this:
    உத்திர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதை கண்டித்தும் விவசாயிகளுக்கு நீதி வேண்டியும் சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை முன்பு 200 க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைகளில் தீப்பந்தம் ஏந்தி நூதன முறையில் பேரணி நடத்தினர்.

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் பேரணி சென்றபோது மத்திய அமைச்சர் மகன் ஒருவரின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர் . அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் விவசாயிகள், பத்திரிக்கையாளர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.  இதனைத் தொடர்ந்து உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ஆறுதல் கூற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது இல்லத்திலிருந்து செல்ல முயன்றபோது பன்வீர்பூர் என்ற பகுதியில் வைத்து காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
    Also read: 15 வருட கார்களின் ரிஜிஸ்ட்ரேஷனை ரினீவல் செய்ய இனி 8 மடங்கு கட்டணம் – விவரம் உள்ளே

    இதனை தொடர்ந்து பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு நியாயம் வேண்டி மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர்

    முன்னதாக வில்லிவாக்கம் பேருந்து நிலைய சாலையில் இருந்து அம்பேத்கர் சிலை வரை தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் வந்தனர் அதுசமயம் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் உத்தரபிரதேச யோகி அரசை கண்டித்து காங்கிரஸார் கண்டன கோஷங்களை எழுப்பினர்
    இதில்  மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மாநில பொதுச் செயலாளருமான பாஸ்கரன் மாநில செயலாளர் ரஞ்சித் குமார் வில்லிவாக்கம் ஐயப்பன் மாவட்ட பொருளாளர் பீமாராவ் சர்க்கிள் தலைவர் ரியாஸ் மற்றும் ராஜேஷ் வழக்கறிஞர் அசோகன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்து கொண்டனர்.

    Also read: மேட்ரிமோனி வெப்சைட்டில் இப்படியும் நடக்குது மோசடி – மக்களே உஷார்!

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரஞ்சன் குமார்
    விவசாயிகளுக்கு ஆறுதல் கூறச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை 48 மணி நேரத்திற்கு மேலாக தடுப்புக்காவலில் கைது செய்து  வைத்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாமல் 50 மணி நேரத்திற்குப் பிறகு வழக்கு பதிவு செய்துள்ளனர்

    இது பாபாசாகேப் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகும் எனவே அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை புறம் தள்ளிய மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தனர்.

    கன்னியப்பன், செய்தியாளர் - அம்பத்தூர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: