ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

50 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையான இயக்கமாக இருப்பதாக குறிப்பிட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக உழைக்குமாறு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

  2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் காணொலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

  நீட் தேர்வு திணிப்பு மற்றும் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தீவிர பரப்புரை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் நிறைவாக உரையாற்றிய ராகுல் காந்தி, 50 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையான இயக்கமாக இருப்பதாக குறிப்பிட்டார்.

  மேலும் தமிழக மக்களுக்கு விடிவு ஏற்படும் வகையில் தேர்தல் அமைய காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர்கள் கே.சி.வேணுகோபால். முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ். தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vijay R
  First published:

  Tags: Congress, Rahul gandhi